Site Meter

Monday, January 07, 2008

ஊனம்

திங்கக்கிழமை காலை அலுவலகத்திருக்கு கிளம்பி கொண்டிருந்தேன். இரண்டு நாள் விடுமுறைக்கு பின்பு அலுவலகம் போவது எப்போதுமே கடினம் தான். மனதை திட படுத்தி கொண்டு பள்ளிக்கு செல்லும் பிள்ளை போல் கிளம்பி சென்றேன்.எனது அலுவலகத்தில் மூன்று அடுக்கு மாடி கட்டிடங்கள் உள்ளன. அதில் மிகவும் உயரமான கட்டிடத்தில் தான் நான் வேலை பார்த்து கொண்டு இருந்தேன். அதில் ஆறு மாடிகள் உள்ளன. என் இருக்கை ஆறாவது மாடியில் இருந்தது. அங்கே தான் கம்பனியின் சீ இ ஒ வின் இருக்கையும் இருந்ததால் எனக்கு எப்பொழுதும் உள்ளுர ஒரு மகிழ்ச்சி. அதை தவிர தென் சென்னையின் பல பகுதியினை எங்கள் மாடியில் இருந்து பார்க்கலாம்.
ஆறு மாடிகள் உள்ளதால் அங்கு லிப்ட் வசதி உண்டு. இருந்தாலும் நான் தினம் காலையில் மட்டும் படியில் செல்வது வழக்கம். நான் செய்து கொண்டிருக்கும் ஒரே எக்செர்சிஸ் அது தான்.
மென்பொருள் துறையில் இரண்டு வருடம் வேலை பார்த்த பின்பு நான் சம்பாதித்தது உடல் பருமன் மட்டுமே.
அதை சரி செய்வதற்காகவே நான் மாடி படியை நாடினேன். எதோ நம்மால் முடிந்தது அது தான். வழக்கம் போல் லிப்டை கடந்து மாடி படியை நோக்கி சென்றேன்.
தினம் ஆறு மாடி ஏறுவது கடினமாகவே இருக்கும். போக போக பழகி விடும் என்ற நம்பிக்கையில் காலத்தை கடத்தி கொண்டிருந்தேன். ஆனால் இன்று பெரும் நம்பிக்கை உடன் சென்று கொண்டிருந்தேன். ஏனென்றால் இரண்டு நாள் முன்னால் தான் திருப்பதி சென்று வந்தேன். அங்கு நான்கு மணி நேரத்தில் நாலாயிரம் படிகள் ஏறின விளைவு.
ஆறு மாடிகள் ஒன்றும் இல்லை என்று தோன்றியது. லிப்டை கடந்து செல்லும் பொழுது போலியோ நோயினால் தாக்கப்பட்ட பெண்ணை கவனித்தேன். அவள் லிப்டுக்காக காத்திருந்தாள். நான் என் வழியை நோக்கி சென்று கொண்டிருந்தேன். மூன்று மாடிகள் ஏறிய பின் நான் அவளை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஆம் கிழே பார்த்த அதே பெண். அவள் வேலை பார்ப்பது நாலாவது தளம் போல. மூன்று மாடிகள் லிப்டில் வந்து ஒரு மாடி படியில் ஏறுவது தான் அவள் வழக்கம் என்று உணர்ந்தேன். அந்த பெண் அவள் செயற்கை கால்களை தூக்கி ஒரு ஒரு படிகளாக ஏற என் கன்னத்தில் அறை விழுவது போல் ஒரு சத்தம். இனிமேல் எந்த காரியத்தையும் துச்சமாக நினைக்க கூடாது என்று முடிவு எடுத்தேன். அந்த பெண்ணின் நம்பிக்கை மற்றும் முயற்சியை பார்த்து மகிழ்ந்து கொண்டே இருக்கையை நோக்கி சென்றேன்.

2 comments:

Radha said...

rombave nalla irundhudu... hats of to her...
this post helped me brush my tamil language.. long time i read something in that.. try hindi too.. koi aacha sa post likh hindi mein...

Harish Krishnan said...

sure...