Site Meter

Thursday, March 19, 2009

திருவாசகம்...

திருவாசகம் -

திருவாசகத்துக்கு உருகாதார்,
ஒரு வாசகத்துக்கும் உருகார்

இது என்றோ எங்கேயோ படித்த ஞாபகம் இருக்கின்றது. ஏதோ ஒரு வகுப்பில், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து, நோட்புக்கின் கடைசி பக்கத்தில் சிறு சிறு படங்கள் வரைந்து கொண்டே கேட்ட ஞாபகம். பத்தாம் வகுப்புக்கு மேல் ஹிந்தி படித்ததால், இதை பற்றி தெரிந்து கொண்டது இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையில் திருவாசகம் அவர் குரலிலேயே வெளியானது. ஆபீஸில் வேலை செய்யும் ஒரு நண்பனிடதிலிருந்து அந்த இசை தகடு கிடைத்தது. அதை என் கணினியில் காபி செய்தேன். ஆனால் அதை ஒரு முறை கூட கேட்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு, எங்கிருந்தோ திருவாசகத்தின் -புக் ஒன்று கிடைத்தது. நானும் வெட்டியாக இருந்ததால், அதை சிறிது நேரம் வாசித்தேன். அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது, இதற்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது உண்மை.

அதில் ஒரு பாடல். (சிவபுராணம் பகுதியிலிருந்து)

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தி வினைமுழுவதும் ஓய உரைப்பன் யான்.

இப்பொழ்து இதை முழுவதும் படிக்க ஆவலாக உள்ளது.





2 comments:

Radha said...

anaithum thamilil ezhudi vittu "kapi" "e book" mattum yean aangilathil???

Harish Krishnan said...

chumma